சர்தார் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர்!

 
சர்தார்2


 
தமிழ் திரையுலகில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “சர்தார் 2” தமிழ் திரையுலகில் ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 2022 ல் மாபெரும் வெற்றி பெற்ற “சர்தார்” திரைப்படத்தின் தொடர்ச்சியாக கருதப்படுகிறது.  2022 ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த ‘சர்தார்’ படம் பெறும் வெற்றியை பெற்றிருந்தது. இதன் காரணமாக படத்தின் 2ம் பாகம் உருவாகும் என படக்குழு அறிவித்திருந்தது.


அதன்படி, இன்று காலை இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.  அதனை தொடர்ந்து இப்பொது டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் கார்த்தியைத் தவிர, ரஜிஷா விஜயனும் இந்த இரண்டாம் பாகத்தில் மீண்டும் நடிக்கிறார். டீசரில், வில்லனாக எஸ்.ஜே. சூர்யா டயலாக் பேசாமலே மிரட்டுகிறார். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தியின் அப்பா கதாபாத்திரம் டீசரில் இடம் பெற்றுள்ளது.  ஹீரோ கார்த்தியின் சர்தார் சந்திரபோஸுக்கும், எஸ்.ஜே. சூர்யாவின் வில்லன் கதாபாத்திரமான ‘தி பிளாக் டாகர்’-க்கும் இடையிலான ஒரு மோதலுடன் முடிவடைகிறது.


இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், யோகி பாபு மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோரும் நடித்துள்ளனர்.  அவர்களை தவிர இந்தப் படம் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது. ​​இதனால், படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web