சங்கரன்கோவில் ஆடித்தபசு தேரோட்டம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

 
சங்கரன்கோவில்

 
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் ஆடித்தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்ட நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம் பிடித்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் நடைபெறும் ஆடித்தபசு விழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, இரவில் கோமதி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சங்கரன்கோவில்


மேலும், கோயில் கலையரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.35 மணிக்கு மேல் கோமதி அம்மன் ரதத்தில் எழுந்தருளினார். காலை 10.10 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு நாளை மறுநாள் ஜூலை 21ல் நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு ஸ்ரீ கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்கார, பரிவட்டம் சாத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தொடர்ந்து மதியம் 1.35 மணிக்குள் தங்கச் சப்பரத்தில் தவக்கோலத்தில் கோமதி அம்மன் தெற்கு ரத வீதியில் உள்ள தபசு மண்டகப்படியில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அன்று மாலை 6.05 மணிக்கு மேல் சிவபெருமான் அரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கர நாராயண சுவாமியாக கோமதி அம்மனுக்கு தவசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், அன்று இரவு 11.45 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமியாக கோமதி அம்மனுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web