அணு ஆயுத போருக்கு ஒப்புதல்.. பகீர் முடிவை எடுத்த ரஷ்ய அதிபர் புதின்!

 
புதின்

அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில் அமெரிக்க அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா ஆயுதங்களை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடையை ஜோ பைடன் நீக்கியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின்

அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைன் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே, அமெரிக்காவின் இந்த முடிவு உக்ரைனுக்கு எதிரான போரை மேலும் தீவிரப்படுத்தும் என ரஷ்யா எச்சரித்திருந்தது. அமெரிக்காவின் அனுமதியை தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் அணு ஆயுதங்களுக்கான ஒப்புதலை புதுப்பித்துள்ளார். புதுப்பிக்கப்பட்ட அணுசக்தி கோட்பாட்டிற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

புதின்

உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார். அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் ஆணையில் புதின் கையெழுத்திட்டார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் ஆயிரமாவது நாளில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web