செம! எச்சில் துப்ப கையடக்க பைகள் !

 
செம! எச்சில் துப்ப கையடக்க பைகள் !


இந்தியா முழுவதும் சுமார் 75 சதவீத மக்கள் பயணங்களுக்காக ரயில்களையே நம்பியுள்ளனர். மக்களின் தேவைகளின் அடிப்படையிலும், அவர்களின் வசதிக்காகவும் ரயில்வே துறையை மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது இந்தியன் ரயில்வேக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

செம! எச்சில் துப்ப கையடக்க பைகள் !

குறிப்பாக, பான் மற்றும் புகையிலை பொருட்களை மென்று துப்புபவர்களால் ஏற்படும் கறையை அகற்ற மட்டுமே ஆண்டுக்கு ரூ.1,200 கோடி ரொக்கப்பணமும் அத்துடன் நிறைய தண்ணீரும் செலவாகி விடுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.இந்தக் குறையை களையும் பொருட்டு கையடக்க பை மற்றும் பெட்டியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.

செம! எச்சில் துப்ப கையடக்க பைகள் !

வடக்கு, மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மண்டலங்களில் அமைந்திருக்கும் 42 ரயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கும் கடைகள் மற்றும் விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. ‘ஈசிஸ்பிட்’ நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.இந்தக் கடைகளில் எச்சில் துப்பும் ஒரு பை ரூ.5 முதல் ரூ.10 வரை 3 வடிவங்களில் விற்கப்பட உள்ளன.

செம! எச்சில் துப்ப கையடக்க பைகள் !

இதன் மூலம் ரயில்வே வளாகத்தில் இருக்கும்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பையில் துப்பிக் கொள்ளலாம். இது மறுபயன்பாடு கொண்டது. ஒரு பையில் 20 தடவை வரை எச்சில் துப்பலாம்.அந்த பைக்குள் ஒரு தானிய விதை வைக்கப் பட்டிருக்கும். பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அது முளைத்து செடியாக வளரும் தன்மை வாய்ந்தது. ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்க இந்த முறை உதவும் என்று ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

From around the web