சீமானுக்கு அடுத்த அதிர்ச்சி... நாம் தமிழர் கட்சியிலிருந்து சேலம் மாவட்டச் செயலாளர் விலகல்!

 
சீமான்
 

நாம் தமிழர் கட்சியில் இருந்து பல மாவட்டங்களிலும் முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து விலகி வரும் நிலையில் சீமானுக்கு அடுத்த அதிர்ச்சியாக நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் அழகாபுரம் தங்கம், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இன்று சீமான் பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள்!

நாம் தமிழர் கட்சியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்த அழகாபுரம் தங்கம், கட்சியின் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். 

அறநிலையத்துறை யாரின் கட்டுப்பாட்டில் உள்ளது? சீமான் காட்டம்!!

இது குறித்து அழகாபுரம் தங்கம் தனது முகநூல் பக்கத்தில், "நாம் தமிழர் கட்சியின் "மாநகர மாவட்ட செயலாளர்" என்ற பொறுப்பிலிருந்தும் கட்சியிலிருந்தும் என்னை விடுவித்துக் கொள்கிறேன்! இதுநாள் வரையில் என்னோடு உடனிருந்து ஒத்துழைப்பு கொடுத்த தோழமைகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவரின் வழியில், தமிழ்தேசிய பாதையில் என்றும் என் பயணம் தொடரும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web