பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை... வாலிபர் கைது.. பைக் பறிமுதல்!
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினத்தில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சிலர் கஞ்சா விற்று வருவதாக ஆறுமுகநேரி போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று காயல்பட்டினம் பரிமார் தெருவில் இளைஞர்களுக்கும், ஒரு வாலிபர் கஞ்சா விற்பதாக ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவனுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அவரது தலைமையில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்குள்ள ஒரு பள்ளிவாசல் அருகில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் அணிந்திருந்த கைலிக்குள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தார்.
அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் நடத்திய விசாரணையில், காயல்பட்டினம் பெரியார் தெரு சிந்தா மதார் சாகிப் மகன் முகமது ஹனிபா (27) என்பது தெரியவந்தது. மேலும், அவர் மதுரையில் ஒரு கஞ்சா வியாபாரியிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்து, காயல்பட்டினம், ஆறுமுகநேரி பகுதியில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கூடுதல் விலைக்கு விற்று வந்ததாக தெரிவித்தார்.
இதை தொடர்ந்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். அவர் கஞ்சாவிற்பனைக்கு பயன்படுத்தி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை போலீசார் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!