பள்ளிக்கு மகனை அழைத்து சென்ற போது சோகம்.. மகன் கண்முன்னே தாய் துடிதுடித்து பலி!

 
ராணி

ஈரோடு அருகே பள்ளிக்கு மகனை அழைத்துச் சென்ற பெண்ணின் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியது. இந்த விபத்தில், மகன் கண்முன்னே தாய் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாரதி நகரில் அமரேஸ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி, தங்களது ஐந்து வயது மகன் அபினவை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

மொடக்குறிச்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது, ​​வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தாய் ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார், மகன் அபினவ் காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த மொடக்குறிச்சி காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

பள்ளி ஆசிரியரின் செக்ஸ் தொல்லை காரணமா?! கரூர் மாணவி தற்கொலை குறித்து தாய் பேட்டி!

பின்னர், சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web