அதிகாலையில் சோகம்.. 7-ம் வகுப்பு மாணவி 29 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!
அடுக்குமாடி குடியிருப்பின் 29வது மாடியில் இருந்து குதித்து 12 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரின் தென்கிழக்கில் உள்ள பேகூர் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு வசித்து வந்த 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டிடத்தின் 29வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதிகாலையில் திடீரென சத்தம் கேட்டு, அடுக்குமாடி குடியிருப்பின் வாட்ச்மேன் ஓடி வந்து சோதனை செய்தார். அப்போது சிறுமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து ஹுளிமாவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், அதிகாலை 4.30 மணியளவில் எழுந்து பால்கனியில் நின்றிருந்த சிறுமி, ‘ஏன் இவ்வளவு சீக்கிரம் எழுந்திரிச்ச?’ என்று அவரது தாய் கேட்டதும், சிறுமி கோபத்துடன் தனது அறைக்கு சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். எனினும் அவர் ஏன் தற்கொலை முடிவை எடுத்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
சிறுமியின் தற்கொலை தொடர்பில் கடிதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமியின் தந்தை மென்பொருள் பொறியாளர். இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு பங்கு வர்த்தகத்தை தொடங்கினார். சிறுமியின் தாய் இல்லத்தரசி. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வருகின்றனர். சிறுமி 29வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க