சாலை வசதி இல்லாததால் சோகம்.. வலிப்பு நோயால் பரிதாபமாக உயிரிழந்த நபர்.. டோலி கட்டி தூக்கிச் சென்ற அவலம்!

 
சேட்டு

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் 230 க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் மலை கிராம மக்களுக்கு முறையான சாலை வசதி இன்று வரை செய்து கொடுக்கப்படவில்லை மலை கிராமங்கள் அனைத்தும் வனப்பகுதியில் அமைந்துள்ளதால் வனத்துறை சாலை அமைப்பதற்கு அனுமதி வழங்காத காரணத்தாலும் இன்று வரை நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாமல் மலைவாழ் மக்கள் நடந்தே கிராமங்களுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு மிதி மலை கிராமத்தைச் சேர்ந்த சேட்டு என்பவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிராம மக்கள் அவரை டோலி மூலம் தூக்கிக்கொண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம் சாலை இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் அவர் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து கிராம மக்கள் உயிரிழந்த சேட்டுவின் உடலை டோலி கட்டி மீண்டும் சொந்த கிராமத்திற்கு நள்ளிரவில் செல்போன் வெளிச்சத்தின் மூலம் கிராமத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர்.

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பெரும்பாலும் சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள், முதியோர்,  உடல் நலம் பாதிக்கப்பட்டு விரைவாக மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் இதுபோன்று தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web