கல்யாணமான 12 நாட்களில் சோகம்... விபத்தில் புதுமணப்பெண் மரணம்!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே, திருமணமாகி 12 நாட்களிலேயே சாலை விபத்தில் புதுமணப்பெண் மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாலி மஞ்ச வாசம் கூட இன்னும் முழுசா போகலையே... ஜாதகம் எல்லாம் பார்த்து தானே கல்யாணம் செஞ்சு வெச்சோம் என்று உறவினர்கள் கதறியழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பரியன்வயலைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது ஒரே மகள் முத்துமணி (27). கோவையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். வளங்காவயலைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது ஒரே மகன் ராமையா (30). வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் ராமையாவுக்கும், முத்துமணிக்கு இடையே திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணம் முடிந்ததும் இருவரும் உறவினர்கள் வீடுகளுக்கு மறுவீட்டிற்கு சென்று வந்துக் கொண்டிருந்தனர். வளங்காவயலில் இருந்து பரியன்வயலுக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது ஆறாவயல் பஞ்சாலை அருகே எதிர்பாராத விதமாக இருவரும் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். பலத்த காயமடைந்த முத்துமணியை காரைக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ராமையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி முத்துமணி உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையறிந்த ராமையாவும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். ஆறாவயல் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!