பெற்றோர்களே உஷார்... 18 வயதுக்கு கீழ் வாகனம் ஓட்டினால் ரூ25000 பைன், லைசன்ஸ் ரத்து!
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலுக்கு வந்தது. ஆனால் அதையும் மீறி மாணவர்கள் பைக்கில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளிலும் இச் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
இந்நிலையில் சிறுவர்களிடம் பைக் கொடுத்து அனுப்பினால், பெற்றோர்களுக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்படும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் அவர்களது வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!