’நெல் கொள்முதலில் 21 லட்சம் ரூபாய் பாக்கி’.. அரிசி ஆலை தொழிலதிபர் கடத்தல்!
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். கடையம் அருகே வெங்காடபட்டி என்ற கிராமத்தில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சூர்யகுமாரிடம் இருந்து சுமார் 98 லட்சத்துக்கு நெல்லை கொள்முதல் செய்தார்.
ஆனால், வாங்கி ஓராண்டு ஆகியும் சுமார் 21 லட்சம் ரூபாய் திரும்ப வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சூர்யகுமார், கடையம் அருகே வெங்காடபட்டி என்ற கிராமத்தில் உள்ள அரிசி ஆலையில் நேற்று மதியம் உதயகுமாரை கடத்திச் சென்றார். இதில் சூர்யகுமார் தனக்கு உதவிய நண்பர்கள் சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் ஆகிய மூன்று பேரையும் சொந்த வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
உதயகுமாரின் தந்தை அன்பழகன் கடையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் தனிப்படை அமைத்து உதயகுமாரை தேடி வந்தனர். இறுதியில், பெரம்பலூர் சுங்கச் சாவடியில் இருந்து கடத்தப்பட்ட உதயகுமார் பத்திரமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட சூரியகுமார், சுரேஷ், ஹரி கிருஷ்ணன், பிரதீபன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!