அலெர்ட்... ரூ2000 நோட்டுக்கள் வாங்கப்படாது.. அமேசான் எச்சரிக்கை!!
இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையாக 2016 ல் ரூ1000 மற்றும் ரூ500 ரூபாய் நீக்கம் செய்யப்பட்டன. அதற்கு பதிலாக புதிய ரூ2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இந்நிலையில் மே மாதம் 19ம் தேதி ரிசர்வ் வங்கி திடீரென செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்கு பிறகு தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அந்த நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கிகள், பெட்ரோல் பங்க்குகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மத்திய அரசு நிர்ணயித்த கால அவகாசம் செப்டம்பர் 30 தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் ஆன்லைன் விநியோக நிறுவனமான அமேசான் அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “அமேசான் தற்போது வரை ரூ.2,000 நோட்டுகளை பணப்பரிமாற்றத்திற்கு ஏற்றுக்கொண்டு வருகிறது.
செப்டம்பர் 19ம் தேதி வரை இதே நடைமுறையே தொடரும் அதற்கு பிறகு பணம் கொடுத்து பொருட்களை டெலிவரி பெறும் வாடிக்கையாளர்கள் ரூ2000 நோட்டுகளை கொடுப்பதை தவிர்க்கவும், அதன்பிறகு ரூ2000 நோட்டுக்களை அமேசான் நிறுவனம் ஏற்றுக்கொள்ளாது” என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமேசான் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!