தாராவி அடுக்குமாடி கட்டிட திட்டத்திற்கு 2,000 கோடி ரூபாய் முதலீடு.. களத்தில் இறங்கிய அதானி குழுமம்!
மும்பை தாராவியில் உள்ள ஆயிரக்கணக்கான குடிசைகளை இடித்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள அடுக்குமாடி கட்டிடங்களை கட்டும் திட்டத்தை அதானி நிறுவனத்திடம் மாநில அரசு ஒப்படைத்துள்ளது. தற்போது அதானி நிறுவனம் தாராவியில் உள்ள குடிசைப்பகுதிகளை கணக்கெடுக்கும் பணியை தொடங்கி முழு வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. அதானி மற்றும் மாநில அரசு இடையேயான ஒப்பந்தத்தின்படி, தாராவியில் வசிக்கும் மக்களுக்கு, அதாவது ஜனவரி 1, 2000க்கு முன் கட்டப்பட்ட குடிசைவாசிகளுக்கு தாராவியில் 350 சதுர அடியில் மாற்று வீடு இலவசமாக வழங்கப்படும். 2000-11ம் ஆண்டுக்குள் குடிசைகள் கட்டியவர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் வீடு ஒதுக்கப்படும்.
தாராவிக்கு வெளியே உள்ள வீடுகள், 2011ம் ஆண்டுக்கு பின் கட்டப்பட்ட குடிசை வீடுகள் மற்றும் மாடிகளுக்கு வாடகை வீடுகள் திட்டத்தில் ஒதுக்கப்படும். இத்திட்டத்தில் வீடு பெறுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கான வாடகையாக அரசு மற்றும் அதானி நிர்ணயித்த தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுடன் இணைந்து அதானி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் செயல் அதிகாரியாக ஸ்ரீநிவாஸ் பணியாற்றி வருகிறார்.
இத்திட்டத்தில் வீடு பெறுபவர்கள் குறிப்பிட்ட ஆண்டுக்கான வாடகையாக அரசும், அதானி நிறுவனமும் நிர்ணயித்த தொகையை செலுத்த வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்த மாநில அரசுடன் இணைந்து அதானி நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் செயல் அதிகாரியாக ஸ்ரீநிவாஸ் பணியாற்றி வருகிறார். இந்தத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஸ்ரீநிவாஸ் அளித்த பேட்டியில், “தாராவி மக்களுக்கு வீடு கட்ட ரயில்வேயில் இருந்து 27 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு ரயில்வேக்கு 1000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. சேரிகளை கணக்கெடுக்கும் பணி அடுத்த 4 - 6 மாதங்களில் முடிக்கப்படும் 10 அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு, தாராவி மக்கள் அந்த வீடுகளுக்கு மாற்றப்படுவார்கள், மேலும் இந்த திட்டத்திற்காக 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக அதானி இதுவரை 2000 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. எனது 34 ஆண்டுகால அரசுப் பணியில் இது மிகவும் சவாலானது. அதிக மக்கள் தொகை அடர்த்தி மற்றும் உயரமான கட்டிடங்கள் கட்டுவதில் கட்டுப்பாடுகள் உள்ள இடங்களில் செயல்படுத்துவது சவாலானது. குடியிருப்புகளுடன் கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. கூடுதலாக கடலோர ஒழுங்குமுறை ஆணையக் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த திட்டத்தை 7 ஆண்டுகளுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். இத்திட்டத்தில் இலவச வீட்டுமனைக்கு தகுதியில்லாதவர்களுக்கு மாற்று வீடு வழங்க நிலம் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல அரசு நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். ஆனால் நிலம் தர மறுக்கின்றனர்,'' என்றார்.
தாராவியில் வசிக்கும் குடிசைவாசிகளை அரசு புறநகர் பகுதிகளான குர்லா, முலுண்ட் மற்றும் பாண்டுப் பகுதிகளுக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால் இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தாராவி மக்களை தங்கள் பகுதியில் குடியமர்த்தினால், தங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தாராவியில் சிலர் ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று மாடிகள் கட்டுகிறார்கள். அவர்களின் வீட்டின் கீழ் தளத்தில் இலவச வீடு வழங்கப்படும். அதானி நிறுவனத்தின் கூற்றுப்படி, மேலே எத்தனை வீடுகள் இருந்தாலும், வாடகை வீடு திட்டத்தில் ஒரு வீடு மட்டுமே ஒதுக்கப்படும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!