வேலை வாங்கி தருவதாக 1.47 கோடி ரூபாய் மோசடி.. பலே இன்ஸ்பெக்டர் அதிரடியாக கைது!

 
இயேசு ராஜசேகரன்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி லலிதா (43). குமரி மாவட்டம் புதுக்கடை காவல்நிலைய ஆய்வாளர் இயேசு ராஜசேகரன் தனது மகன் மற்றும் உறவினர்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 37 பேரிடம் 1.47 கோடி  ரூபாய் மோசடி செய்ததாக குமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனத்திடம் அவர் புகார் அளித்தார்.

ரூ.50,00,000 மோசடி!! அரசு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய அவலம்!!

இதுகுறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் யேசு ராஜசேகரனிடம் கேட்டபோது, ​​அவர் எங்களை மிரட்டுகிறார்.இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரன் மற்றும் அவரது மனைவி கனக துர்கா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி நெல்லை சரக போலீஸ் டிஐஜி மூர்த்தி உத்தரவிட்டார்.

கைது

இந்நிலையில் நேற்று முன்தினம் குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தேனியில் இருந்து இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web