பெரியார் குறித்து பேசியதை சீமான் நிரூபித்தால் ரூ.10 லட்சம் பரிசு! திக இளைஞரணி அறிவிப்பு!

 
சீமான் பெரியார்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நிரூபித்தால் ரூ.10.லட்சம் பரிசு என்று  திராவிடர் கழக  இளைஞர் அணி அறிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஜூன் 8ம் தேதி கடலூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். இந்த சந்திப்பில்  தந்தை பெரியார் குறித்து சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதையடுத்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழகத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் பல  கட்சிகளின் சார்பில் புகார் அளிக்கப்பட்டு வருகின்றன.    

சீமான் பெரியார்

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளர் த.ஆனந்தன் மொரப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தந்தை பெரியார் எந்த இடத்திலும் விடுதலை நாளேட்டிலும் சீமான் கூறிய சர்ச்சையான பதிவுகளை பேசியதோ எழுதியதோ இல்லை. அதே போல் தந்தை பெரியாரின் நன்மதிப்பை குறைக்கும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். 

சீமான் பெரியார்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை சீர் குலைக்க சீமான் முயற்சிக்கிறார். எனவே அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சமீப காலமாக சீமான் தந்தை பெரியாரை குறித்தும் முற்போக்கு சிந்தனையாளர்கள் குறித்தும் சீமான் சர்ச்சைகளுக்குள்ளான கருத்துக்களை பரப்பி வருகிறார். தந்தை பெரியார் குறித்து அவர் கூறிய கருத்துக்களை நிரூபித்தால் தர்மபுரி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் 10 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை! 

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web