அணைகளில் உயரும் நீர்மட்டம்! ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்! ஏக்கத்தில் மக்கள்!

அணைகளில் உயரும் நீர்மட்டம்! ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்! ஏக்கத்தில் மக்கள்!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.அந்த வகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

அணைகளில் உயரும் நீர்மட்டம்! ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்! ஏக்கத்தில் மக்கள்!

அதிகபட்சமாக அடவிநயினார் அணைப் பகுதியில் 20 விளாத்திகுளம் கன்னடியன் கால்வாய் பகுதியில் 10 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழையும், கனமழையும் மாறி மாறி பெய்துள்ளது.

அணைகளில் உயரும் நீர்மட்டம்! ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்! ஏக்கத்தில் மக்கள்!

இதனையடுத்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள 11 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 1,237 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையில் இருந்து விநாடிக்கு 205 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைகளில் உயரும் நீர்மட்டம்! ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்! ஏக்கத்தில் மக்கள்!

சேர்வலாறு அணையில் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை நிலவரப்படி 108.33 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு இன்று காலை முதல் விநாடிக்கு 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதுபோல மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது .

கடனா நதி-62.20, ராமநதி-52.50, கருப்பாநதி-52.50, குண்டாறு-36.10, அடவிநயினார்-129.75, கொடுமுடியாறு -24.25, வடக்கு பச்சையாறு-16.65, நம்பியாறு-10.43 அடிகளாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விரைவில் குளிப்பதற்கு அனுமதி கிடைக்குமா என மக்கள் ஏக்கத்தில் காத்து கிடக்கின்றனர்.

From around the web