வருவாய்துறையினர் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்... பணிகள் பாதிப்பு!

 
வருவாய்

தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வருவாய்த்துறை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவுறு எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை உடனடியாக நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்போராட்டத்தில் 170 பெண்கள் 350பேர் வருவாய் துறை அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். 

வருவாய் துறை

இதனால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உதவி ஆட்சியர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இங்கு வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்கள் வழங்கும் பணி, நலத்திட்ட உதவிகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் பாதிக்கப்பட்டன. மேலும் பட்டா மாறுதல், சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தாலுகா அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web