நெகிழ்ச்சி வீடியோ... ஆன்மிகத்தின் உண்மையான அர்த்தம் தெரிய இந்தியாவுக்கு வாங்க... உருகும் ரஷ்ய பயணி!

 
 ரஷ்ய பயணி

இந்தியாவை சுற்றிப்பார்க்கவும், பாரம்பரிய கலாச்சாரத்தால் கவரப்பட்டு தினமும் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிநாட்டு பயணிகள் வருகை தருகின்றனர்.  அவ்வாறு ரஷ்யாவில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் டெல்லிக்கு வந்துள்ளார். அங்குள்ள கோவில்களுக்கு சென்று சுற்றிப் பார்த்த அவர் இந்தியாவின் சிறப்பு பற்றியும், அங்குள்ள மனிதர்களின் மனிதநேயத்தை பற்றியும் வீடியோ ஒன்றை பதிவு செய்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.



ரஷ்யாவை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இவர்களுக்கு இந்திய குடும்பத்தினர்  ரொட்டி,தால், சப்ஜி மற்றும் அப்பளம் என வகை வகையான உணவை  வழங்கினர். அதனை ருசித்து சாப்பிட்ட அவர் மிகவும் அருமையாக உள்ளது எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் இந்திய குடும்பத்தினர் காட்டிய அன்பிற்கு மிகவும் நன்றி  , “இந்தியாவிற்கு வாங்க... ஆன்மீகத்தின் உண்மையான அர்த்தத்தை இந்தியா உங்களுக்கு காட்டும்” என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள்  பலரும் லைக்குகளை அள்ளிக்குவித்து  ஷேர் செய்து வருகின்றனர் .

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web