பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.... நாளை முதல் முன்பதிவு தொடக்கம்!!

 
ரயில் முன்பதிவு

தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலானவர்களின் ஒரே சாய்ஸாக இருப்பது ரயில்கள் தான். இவைதான் குறைவான செலவில் சொகுசு பயணத்திற்கு  உத்தரவாதம். இதனால் நடுத்தர மக்கள் எப்போதும் ரயில் பயணங்களையே விரும்புவர். தென்பகுதிகளுக்கான ரயில்கள் எப்போதுமே டிக்கெட் கிடைப்பதில்லை . அதிலும் பண்டிகை , விடுமுறை தினங்கள் என்றால் கேட்கவே தேவையில்லை. பயணிகளின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கி விடுகிறது. அந்த வகையில் ஜனவரியில் வர இருக்கும்  பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு நாளை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

ரயில் முன்பதிவு

அதன்படி  ஜனவரி 11ம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள்  செப்டம்பர் 13ம் தேதி புதன்கிழமை நாளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.  ஜனவரி 12-ம் தேதி பயணம் மேற்கொள்ள இருப்பவர்கள்  செப்டம்பர் 14ம் தேதியும் , ஜனவரி 13ம் தேதி பயணம் மேற்கொள்ள  இருப்பவர்கள் செப்டம்பர் 16ம் தேதியும் ,  ஜனவரி 14ம் தேதி பயணம் செய்ய மேற்கொள்ள இருப்பவர்கள் செப்டம்பர் 17ம் தேதியும்,  ஜனவரி 15ம் தேதி பயணம் செய்ய இருப்பவர்கள்  செப்டம்பர் 18ம் தேதியும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

ரயில்

அதேபோல் ஜனவரி 17ம் தேதி பயணம் மேற்கொள்ள செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம் என  ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்வது எப்படி? 
ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான  IRCTC இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம் ஜனவரி 11 முதல் ஜனவரி 17ம் தேதி வரை பயணம் செய்ய, செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 19ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web