எட்டையாபுரம் அரண்மனையை அரசுடைமையாக்கி சுற்றுலாத்தலமாக அறிவிக்க கோரிக்கை!

 
எட்டையபுரம்
 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம் அரண்மனையை அரசுடைமை ஆக்கி, புதுப்பித்து அரண்மனையை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில் சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என பாஜக பிரமுகர் தினேஷ் ரோடி தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வரலாற்று பக்கத்தில் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டது. ஒருங்கிணைந்த திருநெல்வேலி ஜில்லாவில் மிகப்பெரிய பாளையமாகவும் எட்டப்ப நாயக்கர்களால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகவும் எட்டையபுரம் இருந்தது.

மகாகவி பாரதியாருக்கு "பாரதி" என்று பட்டம் கொடுக்கப்பட்டது எட்டப்ப நாயக்கர்களால்தான். தூத்துக்குடி மாவட்டத்திலேயே மிகவும் பிரம்மாண்டமான அரண்மனையாக எட்டையாபுரம் அரண்மனை திகழ்ந்து வருகிறது. ஆனால், தற்போது எந்த ஒருவிதப் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளாமல் பாழடைந்து காணப்படுகிறது.

ஆகவே தமிழ்நாடு மாநில அரசு எட்டையாபுரம் அரண்மனையை அரசுடைமையாக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மேலும் சமீபத்தில் இடிக்கப்பட்ட திவான் பங்களாவை மீண்டும் புதுப்பித்து சுற்றுலா பார்வையிடமாக அறிவித்து மக்களின் பார்வைக்காக அனுமதிக்க வேண்டும்.

எட்டப்ப நாயக்கருக்கு ஒரு வெண்கலச்சிலை அமைத்து மன்னருடைய பொற்கால ஆட்சியை நினைவுபடுத்தும் வகையில் அவருடைய வரலாற்று சிறப்புகளை காட்சிப்படுத்த மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web