செய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் திருப்பணி... செங்கோல் மட ஆதினம் துவக்கி வைத்தார்!

 
செய்துங்கநல்லூர் சிவன் கோயில்

செய்துங்கநல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் திருப்பணிகளை செங்கோல் மட ஆதினம் துவக்கி வைத்தார்.

தென் சிதம்பரம் என அழைக்கப்படும் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிசேகத்தினையொட்டி திருப்பணி தொடக்க விழா நடந்தது. பெருங்குளம் செங்கோல் மட ஆதீனம் 103 வது குரு மகா சன்னிதானம் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார்.  

தூத்துக்குடி

அறங்காவலர் மாரியப்பன் வரவேற்றார்.  இதையொட்டி காலையில் 7 மணிக்கு சுவாமி அம்பாள் சிறப்பு அபிசேகம், பிரார்த்னை பூஜை, தீபாராதனையை தொடர்ந்து விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனம், வாஸ் பூஜை 9 மணி முதல் 10.10 மணிக்குள் நாள் செங்கல் வைத்தல் போன்ற பூஜைகள் நடைபெற்றது. 

ஆலய ஆய்வாளர் நம்பி, நிர்வாக அலுவலர் கோகுல மணிகண்டன், திருசெந்தூர் நில எடுப்பு தாசில்தார் அய்யனார், மணிமூர்த்திஸ்வரம் பிள்ளையார் கோயில் அர்ச்சகர் பாலா, எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தூத்துக்குடி

பூஜைகளை ஆலய அர்ச்சகர் முத்துராமன் தலைமையில் அர்ச்சகர்கள் நடத்தினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் மாரியப்பன் தலைமையில் ஸ்ரீபதஞ்சலி வியாக்கர பாதீ ஸ்வரர் ஆன்மீகப் பேரவையினர் செய்திருந்தனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web