NDAவில் நீடிக்கிறேன் - சந்திரபாபு நாயுடு பொளேர்!

 
சந்திரபாபு நாயுடு

 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி  தேசிய ஜனநாயகக் கூட்டணி  292 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகள் தேவை. எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளமும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கர்களாக மாறியுள்ளனர். இந்த இரண்டு கட்சிகளும் ஆதரவு அளித்தால் தான் பாஜகவால் மத்தியில் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலை நீடிக்கிறது.  ஒருவேளை இந்த கட்சிகளை இந்தியா கூட்டணி தங்கள் பக்கம் இழுத்துக் கொண்டால் பாஜகவால் ஆட்சியமைக்க முடியாது.

சந்திரபாபு நாயுடு நிதிஷ்குமார்


இவர்கள் இருவரையும்  தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணியும், தக்க வைத்துக் கொள்ள பாஜகவும் முயற்சித்து வருகிறது.  இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறாம் என ஆந்திர முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
 இன்று டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.  விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, “ஆந்திராவில் கடந்த 5 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற தேர்தலை வரலாற்றில் பார்த்ததில்லை; தெலுங்கு தேசத்தின் வெற்றி  வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டும். தெலுங்குதேசம் கட்சியை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு மிக்க  நன்றி. வெளிநாடுகளில் இருந்து வந்து தேர்தலில் வாக்களித்து விட்டு சென்றனர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மக்களுக்கு சேவை செய்ய அதிகாரத்திற்கு வரும்போது பதவியை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.  

 

கூட்டணி குறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். அரசியலில் கூட்டணி முக்கியம் அல்ல. மக்கள் நலன் மற்றும் தேச நலனே முக்கியம். மக்கள் நலனுக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.  
“நான் அனுபவசாலி.இந்தியாவில் பலவகையான  அரசியல் மாற்றங்களை  கண்டுள்ளேன். நாங்கள் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான்  நீடிக்கிறோம்.  தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில்  கலந்து கொள்ள டெல்லி செல்கிறேன்.” என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web