அமெரிக்கா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
அமெரிக்கா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


உலகம் முழுவதும் கொரோனா பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் நுழைய பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த வகையில் அமெரிக்காவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது பாதிப்புக்கள் குறைந்து வரும் நிலையில் பயண கட்டுப்பாடுகளை நீக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்கா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


தடுப்பூசி போட்டு கொள்வதற்கான சான்றிதழை காட்ட வேண்டும்.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளும், சில மருத்துவ காரணங்களுக்காக சிகிச்சை பெறுபவர்களுக்கும் தடுப்பூசியிலிருந்து விலக்கு .
குறிப்பிட்ட 50 நாடுகளில் இருப்பவர்கள் , சுற்றுலா அல்லாத பயணமாக வருபவர்களுக்கு தடுப்பூசியில் இருந்து விலக்கு. 60 நாட்களுக்கு மேல் அவர்கள் தங்கியிருந்தால், தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்வது கட்டாயம்.

அமெரிக்கா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகள், தடுப்பூசி போட்டிருப்பதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை காட்ட வேண்டும்.
பயணம் செய்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கடைசி டோஸ் போடப்பட்டிருக்க வேண்டும்.

அமெரிக்கா செல்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!


சர்வதேச பயணிகள், கிளம்புவதற்கு 72 மணி நேரங்களுக்கு முன்பு கோவிட் பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
தடுப்பூசி போட்டு கொள்ளாத அமெரிக்கர்கள் மற்றும் தடுப்பூசியில் இருந்து விலக்கு கேட்கும் வெளிநாட்டு பயணிகள் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும்.
இந்த புதிய நடைமுறைகள் அனைத்தும் நவம்பர் 8 ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web