வெவ்வேறு சாதி என்பதால் காதலுக்கு மறுப்பு.. விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு!
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள எண்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மனைவி லட்சுமி. மில் தொழிலாளிகளான இவர்களுக்கு சுதாகர் (21), மூர்த்தி (20) என இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுதாகர் ராஜபாளையத்தில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் மூர்த்தி தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் நல்லம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகே ஆண் உடல் ரயிலில் அடிபட்டு தலை துண்டிக்கப்பட்டு கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தலை மற்றும் உடல் பிரிந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சிங்கராஜின் இரண்டாவது மகன் மூர்த்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். மூர்த்தி அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் கூறி சம்மதம் பெற முயன்றார். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மூர்த்தியின் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த மூர்த்தி, நேற்று மாலை 5:30 மணியளவில் கேரளா மாநிலம் கொல்லத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்தார். திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் 20 வயது மூர்த்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மூர்த்தியின் தந்தை சிங்கராஜ் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!