இளவரசி பிறந்திருக்கிறாள்... ரெடின் கிங்ஸ்லி -சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை!

பிரபல நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்க்ஸ்லி 2023ல் சின்னத்திரை நடிகையான சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நெல்சன் இயக்கத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆகினர் ரெடின்.
இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது. இதனையடுத்து நகைச்சுவை நடிகராக தொடர்ந்து நடித்து வந்தார் ரெடின். நடிகர் சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தில் இவரது நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது. அதன்பின்னர் விஜயுடன் 'பீஸ்ட்' மற்றும் ரஜினியுடன் 'ஜெயிலர்' என அடுத்தடுத்து இவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இத்தம்பதிகள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ரெடின் கிங்ஸ்லி- சங்கீதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ரெடின் கிங்ஸ்லி தனது மகளை கையில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் அழகிய புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை சங்கீதா தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!