சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட்!

 
ரெட்
 

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென்கிழக்கே 280 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 480 கி.மீ. தொலைவிலும் நிலவி வருகிறது.  

ரெட்

இது, வடக்கு – வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை ஒட்டியப்படி, தமிழக கடற்கரையை நோக்கி மிக மெதுவாக நகா்ந்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று நவம்பர் 27ம் தேதி புதன்கிழமை புயலாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மெல்ல 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது.

ரெட்

இதனையடுத்து இன்று நவம்பர் 28ம் தேதி வியாழக்கிழமை  செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உட்பட  9 மாவட்டங்களில கனமழைக்கு வாய்ப்புள்ளது.நாளை நவம்பர் 29ம் தேதி  சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை,  காஞ்சிபுரம், திருவள்ளூர்   மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

From around the web