நாளை 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் ... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
சென்னையில் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ” வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் இன்று இரவு முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகைக்கு தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 1050 கி.மீ., புதுச்சேரிக்கு தென்கிழக்கே 980 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரக் கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுமா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கடலோர மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளை மறுநாள் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 28ம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை நவம்பர் 27, 28ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மீனவர்கள் அடுத்த 5 நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!