ஸ்... அப்பாடா... சென்னைக்கான கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது!
சென்னைக்கான அதி கனமழை எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று இரவு சென்னையில் 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என தெரிவித்துள்ளது.
அதேசமயம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருப்பத்தூரில் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபென்ஜால் புயல் காரணமாக இன்று (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் புதுவையில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 5.30 மணிக்கே புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இனி அடுத்த 3 முதல் 4 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!