உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

தங்கத்தில் முதலீடு செய்வது எப்போதுமே பாதுகாப்பானதாக கருதப்படுவது சிறப்பு தான் என்றாலும், சென்ற ஆண்டு தங்கத்தின் விலையை ஒப்பிடுகையில், இந்த வருடம் சவரனுக்கு 10,000 ரூபாய் வரையில் குறைந்திருக்கிறது. அதனால், இப்போது நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யும் எண்ணத்தில் இருந்தால், தங்கம் வாங்க செல்லும் முன்பாக இதைப் படிச்சுட்டு போங்க!

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

இந்தியாவில் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்தை பொறுத்த வரை அமெரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் டாலரின் மதிப்பு அதிகரித்து வருகிறது.

டாலரின் மதிப்பு காரணமாக பத்திர சந்தை 2 மாதத்தில் பெரும் உச்சத்தில் உள்ளது. இதுவே தங்கத்தின் முதலீடுகள் குறையக் காரணம். வரும் வாரங்களில் இந்த நிலை தொடரும் பட்சத்தில், தங்கம் விலை மேலும் சரிவினைச் சந்திக்கலாம்.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

அமெரிக்காவின் பொருளாதாரம் மேம்பட்டு வரும் நிலையில், பத்திரம் வாங்குதலை குறைக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதன் காரணமாக தங்கம் விலையானது இன்னும் குறையலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.எனினும் மூன்றாவது அலை குறித்த அச்சமும் சந்தையில் நிலவி வருவதால் சந்தேகத்துக்கிடமாகவே இருந்து வருகின்றது.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை ஆரம்பத்தில் சற்று அதிகரித்தாலும், பின்னர் நல்ல சரிவினைக் கண்டது. ஒரே வாரத்தில் 35 டாலர்களுக்கு மேலாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல் வெள்ளியின் விலையும் பலத்த சரிவிலேயே காணப்பட்டது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது, கடந்த வாரத்தில் பலத்த சரிவிலேயே காணப்பட்டது.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

திங்கட்கிழமை 10 கிராமுக்கு 46,927 ரூபாயாக தொடங்கிய நிலையில், வியாழக்கிழமையன்று குறைந்தபட்சமாக 45,812 ரூபாயாகக் குறைந்து வெள்ளிக்கிழமை 45,986 ரூபாயாக முடிவுற்றது. கடந்த ஆகஸ்ட் மாத உச்சத்தில் இருந்து பார்க்கும்போது 10,200 ரூபாய்க்கு மேல் சரிவில் தான் காணப்படுகிறது.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

அதே போல் திங்கட்கிழமை 63,474 ரூபாயாக தொடங்கிய வெள்ளி விலை , வெள்ளிக்கிழமை 59,888 ரூபாய்க்கு வந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்தினை ஒப்பிடும் போது 77,700 ரூபாயாக இருந்த வெள்ளி 17,800 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கட்கிழமை சவரனுக்கு 35,512 ரூபாய். வெள்ளிக்கிழமை 34,968 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் சவரனுக்கு 8,600 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.

உஷார்!! தங்கம் வாங்க போறீங்களா? இதைப் படிச்சுட்டு முடிவு பண்ணுங்க!

இது நகை ஆர்வலர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் தங்கம் வாங்க நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்பட்டு வருகிறது.வர இருக்கும் பல காரணிகள் தங்கத்தின் விலை குறையவே வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. இதனால், நீண்டகால முதலீட்டாளர்களும் சற்று பொறுத்திருந்து வாங்கினால் நல்ல லாபம் கிடைக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

From around the web