ராயன் முதல் நாள் கலெக்ஷன்.. இத்தனை கோடியா?.. குஷியில் தனுஷ்!

 
ராயன்

நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை எந்த இயக்குனருக்கும் கொடுக்காமல் தானே இயக்கி நடித்துள்ளார். ராயன் படம் உலகம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. இது முழுக்க முழுக்க வடசென்னை பின்னணியில் படமாக்கப்பட்டது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, தூசரா விஜயன், பிரகாஷ்ராஜ், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ராயன்

நேற்று தனுஷ் ரசிகர்கள் படத்தை வரவேற்றுள்ள நிலையில், படம் ஒரு தரப்பில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்ற பிரிவினர் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் படம் எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து முதல் நாளில் வசூலை அள்ளியது.சுமார் 90 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் 12.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சனி, ஞாயிறு என அடுத்தடுத்து விடுமுறைகள் வருவதால் படத்தின் வசூல் அதிகரிக்கலாம் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருப்பதால், அதீத நடிப்பு காட்சிகளை மற்ற நடிகர்களிடம் விட்டுவிட்டு ஒதுங்கி நிற்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சென்டிமென்ட், ஆக்‌ஷன் போன்ற பவர் ஃபேக்ட் காட்சிகளுடன் படம் வெளிவந்தாலும், திரைக்கதையில் ஏற்பட்ட குளறுபடி படத்திற்கு சிக்கலாக உள்ளது. மேலும் ஏ.ஆர்.ரகுமானின் இசையும், பிஜிஎம்மும் படத்திற்கு வலு சேர்த்துள்ளது என்பது பாரட்டக்கூடிய ஒன்று தான்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web