அயோத்தியில் ராம நவமி கொண்டாட்டம்... 1,11,111 கிலோ லட்டுகள் அனுப்பி வைப்பு!

இன்று உலகம் முழுவதும் இந்துக்களால் ராம நவமி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று அயோத்தி ராமர் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 1,11,111 கிலோ லட்டுக்கள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
இன்று ராம நவமியை முன்னிட்டு விஷ்ணு ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட நிலையில், பல மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் அயோத்தியில் தரிசித்து செல்கின்றனர். ராம நவமியை முன்னிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பிருந்தே அதிகளவில் பக்தர்கள் அயோத்தியில் குவிய தொடங்கியுள்ளனர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னர், இது இரண்டாவது வருட ராமநவமி விழா. இந்த வருடமும், பால ராமரின் நெற்றியில் பிற்பகல் சூரியனின் திலகம் விழுவதைக் காண பக்தர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
ராம நவமியை முன்னிட்டு அயோத்தி நகரம் மீண்டும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு பீகாரைச் சேர்ந்த தேவராகன்ஸ் பாபா நிர்வாகம் சார்பில் 40,000 கிலோவுக்கு லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைத்தது.
தற்போது ராம நவமியை முன்னிட்டு ஒரு லட்சம் 1,11,111 லட்டுகள் பிரசாதமாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. கடந்த வருடமும் இவர்கள் 1,11,111 லட்டுக்களை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!