அடி தூள்!! ‘அண்ணாத்த’ டிரெய்லர் இன்று வெளியீடு!!

 
அடி தூள்!!  ‘அண்ணாத்த’ டிரெய்லர் இன்று வெளியீடு!!

இன்று மாலை வெளியாகிறது அண்ணாத்த படத்தின் ட்ரெய்லர். ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக அட்டகாசமாக அண்ணாத்த படம் தீபாவளி ரிலீசுக்கு தயாராக உள்ளது.

அடி தூள்!!  ‘அண்ணாத்த’ டிரெய்லர் இன்று வெளியீடு!!


இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று அக்டோபர் 27 மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

சிவா இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது. ரஜினிகாந்த்துடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா என மிகப்பெரிய நடிகையர்களின் பட்டாளங்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அடி தூள்!!  ‘அண்ணாத்த’ டிரெய்லர் இன்று வெளியீடு!!


இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்க வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த்துக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமையும் என அவரது வெறித்தனமான ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

From around the web