விஜய் அரசியல் குறித்து ஓப்பனாக பேசிய ரஜினி.. இணையத்தில் வைரலாகும் பேட்டி..!

 
ரஜினி - விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியானது. அதன்படி பிப்ரவரி 2ம் தேதி “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இதை அவரே தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் அறிக்கையாகப் பதிவிட்டுள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததும் அவரது ரசிகர்களும், ரசிகர் மன்ற நிர்வாகிகளும் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு வாழ்த்து தெரிவித்தனர். விஜய்யின் அரசியல் வருகைக்கு நடிகர் ரஜினிகாந்த் தற்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இடத்தை விஜய் பிடித்து விட்டார்... பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்! |  Actor Vijay has Reached Rajinikanth Place in Tamil Cinema Says Producer  Rajan - Tamil Filmibeat

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் செல்ல விமான நிலையம் வந்த அவர், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து கேட்டபோது, ​​அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து விஜய் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துகள் என்று தெரிவித்து சென்றார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க

From around the web