இளசுகள் குதியாட்டம்... திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன்... அசத்தல் தேர்தல் வாக்குறுதி!

 
ராஜேசாகேப் தேஷ்முக்

 மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக  நவம்பர் 20ம் தேதி நடைபெற உள்ளது.  தேர்தலில் பா.ஜ., தலைமையில் ஒரு கூட்டணியும், காங்கிரஸ் - சரத் பவார் கட்சி தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகின்றன. அனைத்து கட்சி வேட்பாளரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், பீட் மாவட்டத்தில் உள்ள பார்லி தொகுதியில் போட்டியிடும் சரத் பவார் கட்சி வேட்பாளர் ராஜேசாகேப் தேஷ்முக் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் அவரது வாக்குறுதி ஒன்று இளைஞர்களை திக்கு முக்காட வைத்துள்ளது.  சத்ரபதி சாம்பாஜிநகர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில், ராஜேசாகேப் தேஷ்முக் ஆற்றிய உரையில்  நான் எம்.எல்.ஏ., ஆகினால், திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.

ராஜேசாகேப் தேஷ்முக்

மணப்பெண் தேடும் இளைஞர்களிடம் வேலை அல்லது தொழில் இருக்கிறதா? என மக்கள் கேட்கிறார்கள்.முந்தைய ஆட்சியாளர்கள் ஒரு தொழிலையும் கொண்டு வரவில்லை. எனவே உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமல் திருமணம் நடப்பது கடினமாக உள்ளது. அவர்களது பிரச்னைக்கு நான் தீர்வு காண்பேன் எனப் பேசியுள்ளார்.  அவரது இந்த வாக்குறுதி மஹாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web