தமிழகத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு!

 
மழை
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று  ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யலாம். இந்த மழை வரும் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும்  புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை

ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது . இன்றும் நாளையும்  மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில்  சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக்  கூறப்பட்டுள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web