அடுத்த 3 மணி நேரத்துக்கு இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்... குடையோடு கிளம்புங்க!
இந்திய பெருங்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இதனையடுத்து இன்று மாலை முதல் தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கும். அதன் தொடர்ச்சியாக நாளை, நாளை மறுதினம் மற்றும் நவம்பர் 28ம் தேதி கடலூர் முதல் டெல்டா வரை கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களின் கடல் பகுதிகளில் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!