நெல்லை ரயிலில் வெறிச்சோடி இருக்கும் ஏசி கோச்... ரயில்வே அலட்சியத்தால் நாளொன்றுக்கு ரூ.2,67,370 வருவாய் இழப்பு
திருநெல்வேலி இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் சிறப்பு ரயிலை இரட்டை அகல பாதையில் இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் தொடர்ந்து பல காலங்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
நெல்லையில் இருந்து இன்று மாலை 6:45 மணிக்கு புறப்பட வேண்டிய, "நெல்லை - சென்னை எழும்பூர்" வண்டி எண்: 06070) வாராந்திர சிறப்பு ரயிலில், ஏசி பெட்டிகள் பெருமளவில் காலியாக உள்ளது. நேர் பாதையில் செல்லாமல், ஒவ்வொரு ஊராக சுற்றி காட்டிக் கொண்டு, பயணிகளின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையில், இந்த சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் மட்டும் தான் இந்த இரட்டை அகலப் பாதையில் பாதையில் செல்லுமா? இந்த சிறப்பு ரயில்கள் எல்லாம் அவ்வழியாக சென்றால் ரயில் பாதை தேய்ந்து விடுமா?? இன்று மட்டும் இந்த சிறப்பு ரயிலின் மூலம் ரூ.2,67,370 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!