திருச்சியே அதிருது... திடீர் ரெய்டில் ரவுடியின் தோழி வீட்டில் 70 சவரன் நகைகள், ரூ.18 லட்சம் பறிமுதல்!

 
திருச்சி ரவுடி

மொத்த திருச்சியுமே செய்தி கேட்டு அதிர்ந்தது. ஒன்னு ரெண்டு கிடையாது... மொத்தம் 70 சவரன் தங்க நகைகள். ரவுடியின் தோழி வீட்டில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.18 லட்சம் ரொக்கம், 70 சவரன் தங்க நகைகளைக் கைப்பற்றி உள்ளனர். திருச்சி மாநகர் பகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த  சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரிப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் "ஆபரேஷன் அகழி" என்ற பெயரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதையடுத்து திருச்சி கே.கே. நகர் அருகே உள்ள திருவள்ளுவர் தெருவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தலைமையிலான தனிப்படையினர்  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ​​ஏற்கனவே நில உரிமையாளர்களிடம் ஆவணங்களை கைப்பற்றி மிரட்டி பணம் சம்பாதித்த செந்தில், அண்ணாமலை ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில், அண்ணாமலை தலைமறைவானார். இந்நிலையில் அவரது தோழியின் வீட்டில் தனிப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் லட்சக்கணக்கான பணம், நகைகள் இருந்ததால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 18 லட்சத்து 92 ஆயிரத்து 750 ரூபாய், 70 சவரன் தங்க நகைகள், 17 பத்திரங்கள் உள்ளிட்ட 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கடந்த வாரம் செந்தில், அண்ணாமலை ஆகிய இருவர் மீதும் மிரட்டல், போலி நிலப் பத்திரம் தயாரித்தல், வழிப்பறி, மிரட்டி பணம் பறித்தல் ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே அண்ணாமலை நில பத்திரங்கள் குறித்த மிரட்டல் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தலைமறைவாக உள்ள ரவுடி அண்ணாமலையை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

எஸ்.பி.வருண்குமார்

மேலும், நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்தை யாரேனும் ஆக்கிரமித்தால், குற்றவாளிகள் ஆடியோ, வீடியோ மற்றும் சிசிடிவி ஆதாரங்களுடன் நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ அல்லது மிரட்டல் மூலமாகவோ புகாரளிக்கலாம் என்றும், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரை +91 94874 64651 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!

From around the web