வயநாட்டில் ராகுல்காந்தி, பிரியங்கா... நிவாரண முகாம்களை பார்வையிட்டனர்!
காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி சூரல்மலைக்கு வந்தனர். அவர்களுடன் கே.சி.வேணுகோபாலா, வி.டி.சதீசன் உள்ளிட்ட தலைவர்களும் சென்றுள்ளனர்.
மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, செயின்ட் ஜோசப் அப் பள்ளி மற்றும் மேப்பாடி டாக்டர் மூப்பன்ஸ் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிவாரண முகாம்களை அவர்கள் பார்வையிட்டனர். ராகுல் மற்றும் பிரியங்கா வயநாடு புறப்பட்டு, பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார்கள்.
#WATCH | Kerala: Leader of Opposition in Lok Sabha and former Wayanad MP Rahul Gandhi along with party leader Priyanka Gandhi Vadra at the landslide site in Chooralmala, Wayanad.
— ANI (@ANI) August 1, 2024
A landslide occurred here on 30th July claiming the lives of 167 people. pic.twitter.com/MG6VaUZUIW
#WATCH | Kerala: Leader of Opposition in Lok Sabha and former Wayanad MP Rahul Gandhi along with party leader Priyanka Gandhi Vadra at the landslide site in Chooralmala, Wayanad.
— ANI (@ANI) August 1, 2024
A landslide occurred here on 30th July claiming the lives of 167 people. pic.twitter.com/MG6VaUZUIW
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களை ராகுல்காந்தியும், பிரியங்காவும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கின்றனர். மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பது குறித்து தலைவர்களுடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுமாறு இருவரும் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், திடீரென அவர்களது நிகழ்ச்சியை ரத்து செய்தனர். சாதகமற்ற காலநிலை காரணமாக பயணத்தை ஒத்தி வைக்கிறோம் என்று ராகுல் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் நிலச்சரிவு சோகத்தை ராகுல் எழுப்பி, உயிரிழப்புகளின் அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் பலர் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார். மத்திய அரசு மாநிலத்திற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். சிகிச்சை வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையை விரைவில் உயர்த்தி வழங்க வேண்டும் என்று குரல் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!