பெரிய நடிகர்கள் மௌனம் கலைக்க வேண்டும்... நடிகை ராதிகா பரபரப்பு பேட்டி!

 
ராதிகா

 மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்களை விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த வகையில் தமிழ் திரையுலகிலும் பாலியல் புகார்களை விசாரிக்க கமிட்டி அமைக்க வேண்டும் என நடிகை ராதிகா கோரிக்கை விடுத்துள்ளார்.

ராதிகா
இது குறித்து சென்னையில் பேசிய நடிகை ராதிகா, “ஹேமா கமிட்டி போன்று தமிழ் திரையிலகிலும் கமிட்டி அமைக்க வேண்டும். 80களில் இருந்து திரையுலகை பார்த்து வருகிறேன். தமிழ் திரையுலகிலும் பாலியல் சுரண்டல்கள் உள்ளன. பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை. பெண்களை பொறுத்தவரை திரையுலகம் மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. கேரவன் விவகாரத்தில் என்னை தொடர்புகொண்ட கேரள போலீசாரிடம் என்ன நடந்தது என விரிவாக கூறியுள்ளேன். ஆனால் புகார் அளிக்கவில்லை. சில இடங்களில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருந்தாலும் உடனுக்குடன் தவறுகள் சரிசெய்யப்பட வேண்டும் என்பதற்காகவே பேசினேன்.

ராதிகா


தமிழ் சினிமாவில் இருக்கும் எல்லா நடிகர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஆசை இருக்கவே செய்கிறது.  என்னுடைய வாழ்க்கையில் எந்த பிரச்சனைகள் வந்தாலும் நான் தனியாகதான் எதிர்கொண்டேன். ஹேமா கமிட்டி குறித்து பிரபல நடிகர்கள் பேசாமல் மௌனம் காத்து வருகின்றனர்.  தமிழ் திரையுலகில் உச்ச  நடிகர்கள் குரல் கொடுத்தால், எங்களைப் போன்ற பெண்களுக்கு ஆறுதலாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web