‘புஷ்பா 2’ பட சிறப்பு காட்சியின் போது கூட்டநெரிசலில் சிக்கி பெண் மரணம், குழந்தைகள் காயம்!

 
புஷ்பா

ஐதராபாத்தில் நேற்று அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவான ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிகழ்வில் குழந்தைகள் பலர் படுகாயமடைந்தனர்.


ஐதராபாத்தில் புஷ்பா 2 சிறப்புக் காட்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்த குழந்தை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு காட்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டதால், ரசிகர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்திய போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

புஷ்பா

அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஷ்பா 2 திரைப்படத்தின் பிரீமியர் காட்சியின் போது, ​​ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ்ரோட்ஸில் உள்ள சந்தியா தியேட்டரில் நேற்றிரவு இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சிறப்பு காட்சி வெளியீட்டின் போது, ரசிகர்களை வரவேற்க நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்குக்கு வந்தது ரசிகர்களிடையே ஆர்வத்தை அதிகரித்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பிரீமியர் காட்சியைக் காணவும் அல்லு அர்ஜுனைப் பார்க்கவும் ரசிகர்கள் அதிகளவில் கூடினர். நடிகர் அல்லு அர்ஜூன் திரையரங்கிற்குள் நுழைந்ததும் கூட்டம்  அவரைக் காண முன்னோக்கி முண்டியடித்தது.

புஷ்பா

இது குறித்து பத்திரிகையாளர் சுமித் ஜா கூறுகையில், 9 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகன்களுடன் படத்தைக் காண வந்திருந்த ரேவதி என்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தைகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

திரையரங்கில் சிறப்பு காட்சிகளின் போது பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசார், கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தி கலைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதால் கூட்டநெரிசல் முண்டியடித்ததில் ஒரு பெண்ணும், அவளது குழந்தைகளும் கீழே விழுந்து காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web