புரட்டாசி ஞாயிறு... தமிழகத்தில் வெறிச்சோடிய இறைச்சி கடைகள்!

 
மீன் கடை மார்க்கெட் அசைவம்
புரட்டாசி மாதம் துவங்கிய நிலையில், எப்போதும் அதிகாலை முதலே பரபரப்பாக காணப்படும் இறைச்சி கடைகளும், மீன் மார்க்கெட்களும் இன்று தமிழகத்தின் பல இடங்களிலும் வெறிச்சோடி காணப்பட்டன. புரட்டாசி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று அசைவ ப்ரியர்கள் அடுத்த ஒரு மாத காலத்திற்கு சைவ உணவு பழக்கத்திற்கு மாறியதால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 

இறைச்சி மட்டன் சிக்கன்

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பது ஐதீகம். பெருமாளை வழிபடும் பக்தர்கள் மட்டுமல்லாது, பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து, விரதம் இருப்பவர்கள் சைவ வகை உணவுகளை இந்த ஒரு மாதமும் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

இறைச்சி மட்டன் சிக்கன்

நேற்று புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால், பெருமாள் கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருப்பதியில், பெருமாள் தரிசனத்திற்காக பக்தர்கள் 20 மணி நேரம் வரையில் வரிசையில் காத்திருந்தனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதுமே இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். கொரோனா காலங்களில் கூட, மீன் மார்க்கெட், இறைச்சி கடைகளை ஞாயிற்றுக்கிழமைகளில் இதன் காரணமாகவே திறப்பதற்கு அனுமதிக்கப்படாமல் இருந்தது. அப்போதும் விடாமல் பலரும் சனிக்கிழமையே வாங்கி, பிரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சமைத்தனர்.

இந்நிலையில் புரட்டாசி மாதம் துவங்கியதைத் தொடர்ந்து இறைச்சி கடைகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இறைச்சி விற்பனை எதிர்பார்த்ததைவிட மந்த நிலையில் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web