இதை மறக்கவே மறக்காதீங்க... புரட்டாசியில் பெருமாள் வழிபாட்டில் எத்தனை பலன்கள் தெரியுமா?

 
வருடம் முழுவதும் செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை விரதம்! இப்படி செய்து பாருங்க! பெருமாள்

சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடு அத்தனை நல்லது. அதிலும் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு மகத்துவமானது. ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒரு ராசியில் சஞ்சாரிக்கும். அந்த வகையில் புரட்டாசி மாதம்  முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். அதனால் இந்த மாதத்தை கன்னியா மாதம் என்பர்.  புரட்டாசி மாதம் பெருமாளை உள்ளன்போடு வழிபட வேண்டிய மாதம் இது. 

நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமான  புதன் கிரகம் உச்ச பலம் பெறும்  கன்னி ராசியில், சூரியன்  சஞ்சரிக்கும் புரட்டாசி மாதத்தை  பெருமாளுக்கு உரிய மாதமாக ஆன்மீக அன்பர்கள் கொண்டாடுகின்றனர்.  

திருப்பதி திருமலை பெருமாள்

சூரியனின் தேவதையான பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமானும், புதனின் தேவதையான  நாராயணனும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர நாராயணராக் இணைந்து சூரியநாராயண ஸ்வாமி என்று பெயர்  பெற்றார். 

சனி தசை நடப்பவர்கள், சனியின் ஆதிக்கத்தால் சிரமம் அனுபவிப்பவர்கள் இந்த புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாள் கோவிலில் எள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட சங்கடங்கள் குறையும். 

திருப்பதி குடை வெங்கடாஜலபதி பெருமாள்

புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க முடியாவிட்டாலும் புரட்டாசி சனிக் கிழமைகளிலாவதுவிரதம் இருந்து காய்கறி தானிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு , துளசி தீர்த்தம் பருகி விஷ்ணுவின் பாடல்கள் , துதிகளை  பாராயணம் செய்து வர வளமான வாழ்வு அமையும் என்பது காலம் காலமாக நம்மில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web