பொதுமக்கள் வரவேற்பு... மார்ச் 30 முதல் திருச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை!

 
விமானம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாா்ச் 30ம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் சார்பில் மும்பை மற்றும் யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கான முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவையானது, திருச்சி- மும்பை வழித்தடத்தில் தினமும் இரவு 10.30 மணிக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு 12.35 மணிக்கு திருச்சியை வந்தடையும். அதே போன்று மீண்டும் திருச்சியில் இருந்து அதிகாலை 1.05 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.10 மணிக்கு மும்பை சென்றடையும். மும்பையிலிருந்து பல வெளிநாட்டு விமானங்கள் அதிகாலையில் புறப்படுவதால் அதை இணைக்கும் வகையில், திருச்சி - மும்பை விமான சேவை நள்ளிரவு பயணமாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

திருச்சி-யாழ்ப்பாணம் விமான சேவை: திருச்சி - யாழ்ப்பாணம் இடையிலான இண்டிகோ விமான சேவை மாா்ச் 30ம் தேதி தொடங்க உள்ளது. இதற்கான முன்பதிவும் ஏற்கெனவே தொடங்கப்பட்டு விட்டது.

தனது தொடா் முயற்சிக்கு கிடைத்த பலனாக தற்போது யாழ்ப்பாணத்துக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளதாக திருச்சி எம்.பி. துரை வைகோ பெருமிதம் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், விமானக் கட்டணமாக அட்டவணையிடப்பட்ட தொகையைக் குறைத்து, அனைவரும் அணுகக்கூடிய சாதாரண கட்டணத்திலேயே இந்தச் சேவையை வழங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

விமானம் விமான நிலையம்

திருச்சியிலிருந்து இன்னும் பல உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்கும் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். அதற்கான எனது முயற்சியை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா் அவா்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web