பொதுத்தேர்வு தேதிகள் மாற்றமா? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!!

 
தேர்வு தாள்கள் திருத்தும் பணி

தமிழகத்தில்  10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 18ம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், 11ம் வகுப்புக்கு மார்ச் 19ம் தேதியும், 10ம் வகுப்புக்கு ஏப்ரல் 8ம் தேதி பொதுத்தேர்வும் நடைபெற உள்ளன.  

தேர்வு

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மீண்டும் பொதுத்தேர்வு தேதிகள் இறுதி செய்யப்படும் என  பள்ளிக்கல்விதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டப்பேரவை   இடைத்  தேர்தல்

அப்படி மார்ச் - ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்று அறிவிப்பு வந்தால் பொதுத்தேர்வு தேதி மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கும்.  2019 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் - மே மாதங்களில் நடத்தப்பட்டன. 18வது மக்களவைத் தேர்தல் 2024ம் வருடம் எந்த தேதிகளில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மூலம் அறிவித்ததுடன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

From around the web