பிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது... இஸ்ரோ பெருமிதம்!

 
பிஎஸ்எல்வி53
 

 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ   'நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்' அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை  வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி  வருகின்றன. அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்ய ப்ரோபா3 எனும் இரட்டை செயற்கைக்கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு  நிறுவனம் வடிவமைத்து இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலைநிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பிஎஸ்எல்வி53


அதன்படி, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஏவுதளத்திலிருந்து நேற்று டிசம்பர் 4ம் தேதி புதன்கிழமை  மாலை 4.08 மணிக்கு பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இதற்கான 25 மணி நேர கவுன்ட்டவுன் டிசம்பர் 3ம் தேதி  செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பிஎஸ்எல்வி

இறுதிகட்ட சோதனைகளில் ப்ரோபா-3 செயற்கைக்கோளில் சில தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்த ராக்கெட் ஏவும் நிகழ்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி  ராக்கெட் ஏவுதல் இன்று டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை  மாலை 4.04 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், பிஎஸ்எல்வி சி-59 செயற்கைக்கோள் திட்டமிட்டபடி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web