இன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்... வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து விஜய் அறிவிப்பு!

இன்று தமிழகம் முழுவதும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டசபையில் வக்பு வாரிய சட்டத்திருத்தம் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர போவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஏப்ரல் 4ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்” என நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!