ஜப்பான் இளவரசி யூரிகோ காலமானார்... தலைவர்கள் இரங்கல்!

 
ஜப்பான்
 


 
ஜப்பான்  இளவரசி யூரிகோ  காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினராவார். இவருக்கு வயது 101.  பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமாகி விட்டதாக ஜப்பானிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இதுவரை  எந்த தகவலும் வெளியாகவில்லை.  

இருந்தபோதிலும், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததால், அதன்காரணமாக உயிரிழந்திருக்கலாம் என  ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன.
1923 ல் 2ம் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், யூரிகோ தனது 18வது வயதில் இளவரசர் மிகாசாவை திருமணம் செய்தார்.

இளவரசி யூரிகோவின் காலமான செய்தி அறிந்ததும்  ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் ``மார்ச் மாதத்தில் யூரிகோ நிமோனியாவால் பாதிப்படைவதற்கு முன்புவரையில், அவர் நன்றாகவே இருந்தார். அவர் தனது நூற்றாண்டு காலத்திலும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தார்'' என பதிவிட்டுள்ளார்.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web