கடைசி மூச்சு உள்ளவரை அமெரிக்காவுக்காக உழைப்பேன்.. அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி !
அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்வாகி உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் இதுவரை 227 மாகாணங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள நிலையில், அவருடைய ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெற்றியைத் தொடர்ந்து ட்ரம்ப் ” இந்த தேர்தலில் நான் வெற்றிபெறுவேன் என்பது எனக்கு முன்பே தெரியும். என்னைத் தேர்தலில் வெற்றிபெற வைத்த மக்களுக்கு நான் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் ஆட்சிக்கு வந்துள்ளதால் அமெரிக்க மக்களுக்காகக் கடுமையாக உழைப்பேன். என்னுடைய கடைசி மூச்சு உள்ளவரை நான் அமெரிக்காவுக்காக அயராமல் உழைத்துக் கொண்டே இருப்பேன். கண்டிப்பாக இந்த நேரத்தில் நான் உறுதியான வாக்கைக் கொடுக்க நினைக்கிறேன். அது என்னவென்றால், அமெரிக்காவை மீண்டும் மகத்தான நாடாக மாற்றுவேன்.
இதுவரை அமெரிக்காவில் என்னென்ன பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறதோ அந்த பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளும் விரைவாக நடவடிக்கை எடுப்பேன். மக்கள் என்னை நம்பி வாக்களித்துள்ளனர். அவர்களுடைய நம்பிக்கையை முழுவதுமாக நிறைவேற்றுவேன். என்னுடைய இந்த வெற்றியின் மூலம் எதிர்க்கட்சியின் நம்பிக்கை வீண் போனது. என் மீது பல தடைகள் வைக்கப்பட்டது.. அதனைத் தாண்டி வெற்றி பெற்றுள்ளேன் என்பதை நினைக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இக்கட்டான சூழ்நிலையில் எனக்குள் உறுதுணையாக இருந்த என் குடும்பத்திற்கு இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பேசியுள்ளார். டொனால்ட் டிரம்ப் பேசிக்கொண்டு இருந்த போதே அவருடைய ஆதரவாளர்கள் US..US..என கோஷமிட்டனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!